
தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். பல ஸ்டாண்டப் காமெடிகளை செய்து அவர் நிகழ்ச்சியின் மூலம் முக்கியத்துவத்தை பெற்றதோடு படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது அவர் சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதில் அவர், தான் திருநெல்வேலி தீ சம்பவம் குறித்து நான் பத்திரிக்கையாளர்களை திட்டியதாக ட்விட்டரில் பதிவுசெய்துள்ளனர்.
ட்விட்டரில் இதுபோன்று என் பெயரில் சிலர் தவறான கருத்துக்களை பரப்பி என்னுடைய பெயருக்கு களங்கம் வரும் வகையில் செய்துள்ளனர். நான் அதுபோல எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.