பல்சமய இல்லத்தில் ஓசையும் சமயங்களும் (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கடந்த 22. 10. 2017 பல்சமய இல்லத்தில் ஓசையும் சமயங்களும் எனும் தலைப்பில் எண்சமய்த்தவர்களும் தத்தமது இசையினை பல்லின மக்களுக்கும் விளக்கும் வகையில் இசைநாள் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்ட நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சைவத்தமிழ் இசையினை இளந்தமிச் செல்வங்களின் நல்கையுடன் சைவநெறிக்கூடம் படைத்தளித்தது.

நிறைவில் பேர்ன் இசைப்பல்கலை;கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி பேராசிரியர் திருமதி பிறித்தா சுவீர், கலாநிதி திருமதி காபிகுனொக்முண்ட், இசுலாமிய மதகுரு முஸ்தப்பா மேமேத்தி, சைவநெறிக்கூடத்தின் சார்பில் திரு. தில்லையம்பலம் சிவகீர்த்தி, கலாநிதி. மார்த்தினா பேர், ஆகியோர் பங்கெடுத்தனர்.

எண்சமயத்தவர்களும் பங்கெடுத்து, இசை தமது வாழ்வில் அளிக்கும் பங்கு தொடர்பாகவும், நகரத்தில் சமயங்களின் இசை இக்காலத்தில் எவ்வாறு அமைந்துள்ளது என்பது தொடர்பாகவும், விஞ்ஞான ஆய்வின் அடிப்படையிலும், சமூகவாழ்வியல் முறைமைக்கு உட்பட்டும் பேசினார்கள்.

சைவநெறிக்கூடம் இந்நிகழ்விலும் பங்கெடுத்து 80ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரை புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத்து சைவத்தமிழ்ச் சமூகம் தமது வாழ்வில் இசையினை எவ்வாறு பயன்படுத்துகிறது என்றும், சைவசமயத்திற்கு தமிழோடு இசை எத்தகைய தேவை என்பதையும் யேர்மன் மொழியில் எடுத்து விளக்கியது.
ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் வளாகத்திலும், பல்சமய இல்லத்தின் கேட்போர் கூடத்திலும் இந்நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.

swiss-tamil-1

swiss-tamil-2

பெருமளவு சுவிஸ் நாட்டவர்களும் பல்சமய பல்லினத்தவர்களும் பங்கெடுத்து இசைவிழாவினைச் சிறப்பித்திருந்தனர்.

இளந்தமிழச் செல்வங்கள் அளித்த இசை, இயல், நாடக விருந்து அனைவரையும் மிகவும் கவர்ந்திருந்தது. ஈழத்தில் இருந்து வருகை அளித்திருக்கும் மதுசூதனன் குழுவினர் அளித்த மங்கல இசை மேலும் நிகழ்விற்கு மெருகூட்டியிருந்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*