மைத்திரியின் மகளை பாராட்டும் மஹிந்தவின் மகன்!

பிறப்பு : - இறப்பு :

625-147-560-350-160-300-053-800-264-160-90-13

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன எழுதி வெளியிட்ட “ஜனாதிபதி தந்தை” புத்தகம் தன்னால் கொள்வனவு செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அந்த புத்தகத்தில் தான் அறிந்த மைத்திரிபால சிறிசேன குறித்தே உள்ளதாகவும், புத்தகத்திற்காக சிறந்த முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறித்து புத்தம் எழுதுவதற்கு எண்ணம் உள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் நாமலிடம் வினவியுள்ளார்.

தனக்கு புத்தகம் எழுதும் திறன் ஒன்று இல்லை என நாமல் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும், சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வாராந்தம் கடிதம் ஒன்று எழுதி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit