வாழ்க்கை செலவைக் குறைப்பதற்கு அமைச்சர் ரிசாத்தின் புதிய நடவடிக்கை

பிறப்பு : - இறப்பு :

625-147-560-350-160-300-053-800-264-160-90-10

பொதுமக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு சதொச ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் அறிவித்துள்ளார்.

வவுனியா சதொச விற்பனை நிலையத்திற்கு இன்றைய தினம்(23) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பொதுமக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் நடமாடும் விற்பனை வண்டிகள் வாயிலாக சதொசவின் பொருட்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக ஐம்பது வண்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைக்கு கொழும்பில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் விரைவில் நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள 360 சதொச விற்பனை நிலையங்களும் இந்த நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, அரசியின் விலையை குறைப்பதற்காக அரிசி இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போதைக்கு 73 ரூபா வரை அரிசியின் விலை குறைந்துள்ளது என்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit