விபத்தில் பலியான நபர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு: ஏர் ஏசியா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த நபர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 28 திகதி மலேசியாவின் ‘ஏர் ஏசியா’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 162 பேருடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் அந்த விமானம் ஜாவா கடல் பகுதியில் பங்க்லான் பன் என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 155 பயணிகளும், 7 ஊழியர்களும் பலியாகி விட்டனர். அவர்களது உடல்களை மீட்கும் பணியில் 20 போர் விமானங்களும், 27 கப்பல்களும் ஈடுபட்டு உள்ளன. இன்று 11வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது.

இந்த தேடுதல் வேட்டையில் 40 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விமானத்தின் 5 பாகங்கள் மற்றும் வால் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் ஏர் ஏசியா நிறுவனம் பலியானவர்களில் சிலரின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 15 லட்சத்திற்கான டிடியை அளித்தது, அவர்கள் அதனை ஏற்க மறுத்து திருப்பிக் கொடுத்தனர்.

இதனையடுத்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 62.61 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*