“திலீபனின் வழியில் வருகின்றோம்”எனும் இறுவெட்டு வெளியீடு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-147-560-350-160-300-053-800-264-160-90-1

தியாகத் தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு “திலீபனின் வழியில் வருகின்றோம்”எனும் இறுவெட்டு வெளியிட்டு நிகழ்வு திருகோணமலையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வு ஜனநாயக போராளிகள் கட்சியின் திருமலை பிராந்தியத்தின் தலைவர் நவமேனன் தலைமையில் திருகோணமலை, குளக்கோட்டன் மண்டபத்தில் நேற்று மாலை 6 மணியவில் நடைபெற்றுள்ளது.

இந்திய இராணுவத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து மண்ணிற்காக உயிரை மாய்த்த தியாகத் தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், திருகோணமலை மாவட்ட இலவச சட்ட உதவி மையத்தின் பொறுப்பாளர் யோகேஸ்வரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த இறுவெட்டானது இந்தியாவின் பிரபல புரட்சிப் பாடகர் செல்லப்பாவின் குரல்களில் பாடப்பட்டு, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தின் வெளியீட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit