இலங்கை – இந்தியா தொடர்: கோஹ்லி விளையாட மாட்டார்… என்ன காரணம்?

பிறப்பு : - இறப்பு :

இலங்கை – இந்தியா இடையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டி தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் விளையாட இயலாது என கோஹ்லி பிசிசிஐ-யிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை – இந்தியா அணிகள் இடையிலான மூன்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர் நவம்பர் 16-ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 24-ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் பங்கேற்க இயலாது என கோஹ்லி பிசிசிஐ-யிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக கோஹ்லி இந்திய அணிக்காக ஓய்வின்றி விளையாடி வரும் நிலையில், இந்த இடைவெளியில் புத்துணர்ச்சி பெற்று கொண்டு அடுத்த வருடம் ஜனவரியில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கு முன்னர் இந்த வருடத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோள்பட்டை காயம் காரணமாக கோஹ்லி விளையாடாமல் ஓய்வெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit