கடந்த கால விடுதலைப்புலிகளின் சமூகமயப்படுத்தப்படுத்தலே நல்லிணக்கத்திற்கான முயற்சி: கோட்டா

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ggt

கடந்த காலங்களில் பெருவாரியான விடுதலைப்புலி உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்டனர். அதுவே, நல்லிணக்கத்திற்கான முயற்சி என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “சாதாரண தமிழ் மக்களின் தேவை தமிழ் அரசியல்வாதிகளின் தேவையாக இல்லை. யுத்தத்தினால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என குறிப்பிட்ட ஒரு தரப்பினர் இருந்தனர். அவர்கள் தற்போது அரசியல் அமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என கூறுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகளின் தேவை சாதாரண தமிழ் மக்களின் அபிலாஷையாக இல்லை.

கடந்த காலத்தில் தீவிரவாதத்திற்காக ஆயுதம் சேகரித்தவர்களின் தேவைக்காக கொண்டுவரப்படும் அரசியல் அமைப்பு எத்தகையதென்பதை புரிந்துகொள்ள முடியும்” என கூறினார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit