விசாரணைகளுக்கு அஞ்சப் போவதில்லை – ஜனநாயகப் போராட்டம் தொடரும்: சிவகரன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அநாவசிய விசாரனைகளை கண்டு சிவில் சமூக செயற்பாட்டாளர்களாகிய நாம் ஒதுங்கி விட மாட்டோம். ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை தொடாந்தும் முன்னெடுத்துச் செல்லுவோம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பயங்கரவாத விசாரனைப் பிரிவினால், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சிவகரன், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில், ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “சிவில் சமூக செயற்பாடுகள், செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய ஜனநாயகம் என்று சொல்லி, அல்லது நல்லாட்சி என்று சொல்லி ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கின்றமையானது அரசாங்கம் தனது கையாலாகத்தன்மையை காட்டுவதாகவே எங்களுக்கு தெரிகின்றது.

இதில் தமிழ் அரசியல்வாதிகளின் பங்கும் இருக்கின்றதோ? என்கின்ற சந்தேகமும் எனக்கு இருக்கின்றது. ஜனநாயாக ரீதியான செயற்பாடும், ஜனநாயாக ரீதியான போக்கும், எமது உணர்வு சார்ந்த போராட்ட முன்னெடுப்புக்களும், தேசியத்திற்குரிய பணிகளும் தொடர்ந்தும் எங்களினால் முன்னெடுக்கப்படும்.

4ஆம் மாடியல்ல இவர்கள் எத்தனையாம் மாடிக்கு அழைத்தாலும் நாங்கள் அச்சப்பட்டோ அல்லது பயந்து கொண்டு போக மாட்டோம். இவர்களுடைய அநாவசிய விசாரனைகளை கண்டு சிவில் சமூக செயற்பாட்டாளர்களாகிய நாம் ஒதுங்கி விட மாட்டோம்.தொடர்ந்தும் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்” என கூறினார்.

மன்னார் மாவட்டத்தில் அரசுக்கு எதிரான மற்றும் அரசிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற எந்த விதமான நிகழ்வுகளையும் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியதை தாம் ஒரு மிரட்டலாகவே எடுத்துக்கொள்வதாக சிவகரன் மேலும் தெரிவித்துள்ளாா்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*