அஸ்வின் ஜடேஜாவை ஏன் இந்திய அணியில் எடுக்கவில்லை: கோஹ்லி விளக்கம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

koli

நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 3டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கிடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் பகல்-இரவு ஆட்டமாக துவங்கவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி, சமீபகாலமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வரும் அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கிண்ணத் தொடருக்கு முன் நாங்கள் சிறந்த பந்து வீச்சாளர்களை கண்டுபிடிக்க வேண்டும். தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை கவனித்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள வீரர்கள் பந்து வீச்சின் பனிச்சுமை எவ்வளவு பெரியது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.

அஸ்வின் மற்றும் ஜடேஜா போன்றவர்கள் 6 முதல் 7 வருடங்கள் வரை விளையாடியுள்ளனர். அவர்களுக்கு போதிய அனுபவம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்திய அணியில் தற்போது ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் சகால் ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit