வட மாகாண சபை உறுப்பினர்களின் சுயநலம் ஆதாரத்துடன் அம்பலம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vada

சொந்­தத் தேவை கார­ண­மாக வடக்கு மாகாண சபை­யில் இடம்­ப­றும் சபை அமர்­வு­க­ளில் அதி­க­மான உறுப்­பினர்­கள் கலந்துகொள்­வ­தில்லை என பேர­வைச் செய­ல­கத்­தின் புள்ளி விவ­ரங்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

வடக்கு மாகாண சபை­யில் இது­வரை நடை­பெற்ற அமர்­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் அந்­தப் புள்­ளி­ வி­வரங்­கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

அந்­தப் புள்­ளி­ வி­வரத்­தின்படி மேலும் தெரி­யவருவதாவது:

வடக்கு மாகாண சபை தோற்­றம் பெற்ற பிறகு இது­வரை 108 சபை அமர்­வு­கள் நடை­பெற்­றுள்­ளன. சபை அமர்வு என்­பது மிக முக்­கி­ய­மான தொன்­றா­கும்.

மக்­கள் சார்ந்த பிரச்­சி­னை­கள் மற்­றும் அது தொடர்­பான பிரே­ர­ணை­கள் முன்­வைக்­கப்­பட்டு அதற்­கான தீர்­வு­கள் எட்­டப்­ப­டும் அவை­யாக அது உள்­ளது.

அந்த சபை அமர்­வில் சபை உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் இருக்க வேண்­டும், அப்­போதே பிரச்­சி­னை­கள் தொடர்­பான முடி­வு­க­ளைத் தெளி­வா­கச் சம்­பந்­த­பட்ட நபர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாட முடி­யும்.

ஆனால் இது­வரை நடை­பெற்ற சபை அமர்­வு­க­ளில் சபை உறுப்­பி­னர்­க­ளின் வர­வின் மொத்த வீதம் 60 முதல் -70 வீத­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.

சபை அமர்­வு­க­ளுக்கு வருகை தரா­த­வர்­கள் சொந்த விட­யம் கார­ண­மா­க­வும், வெளி­நாட்­டுப் பய­ணம் கார­ண­மா­க­வும் வருகை தர முடி­யாது என்று அறி­வித்­த­வர்­க­ளா­கவே உள்­ள­னர்.

மூன்று சபை அமர்­வுக்­குத் தொடர்ந்து வருகை தரா­த­வர்­கள் தொடர்­பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்ற கார­ணத்­தி­னால், இடை­யிலே சபை அமர்­வொன்­றுக்கு வருகை தந்து அத­னைப் புதுப்­பித்­துச் செல்­ப­வர்­க­ளும் உள்­ள­னர்.

சபை அமர்­வு­க­ளில் அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் இருக்க வேண்­டும் என்று அவைத் தலை­வர் தெரி­வித்து இருந்­தா­லும் அந்த ஒழுங்கு தொடர்­பான கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுப்­ப­தற்கு எழுத்து மூல­மான ஆவ­ணங்­கள் இல்லை. என்று சுட்டிக்காட்டுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit