கிளிநொச்சி பொலிசாரால் 13.730 கிலோ கேரலா கஞ்சா மீட்பு

பிறப்பு : - இறப்பு :

drug

கிளிநொச்சி பொலிசாரால் நேற்றிரவு 13.730 (பதின் மூன்று கிலோ 730 கிராம்) கிலோ கேரலா கஞசா மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட குறித்த கஞசா பொதி பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன அவர்களின் விசேட மது ஒழிப்பு பிரிவினரின் விசேட தேடுதலிற்கமைய குறித்த கஞசா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபரையும், மீட்கப்பட்ட கஞசா பொதிகளையும் நீதிமன்றில் முற்படுத்தஉள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit