இலங்கையில் பெண்களின் விருப்பத்துடனேயே அதிக வல்லுறவுகள்; அதிரவைக்கும் காரணம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கையில் 68 சதவீதமான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பெண்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே நடப்பதாக ஸ்ரீலங்கா பொலிஸ் புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவு தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடிப்படையாகவைத்தே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைச் சட்டத்தின்படி 16 வயதுக்கும் குறைந்த இளம் பெண்களை அவர்களது விருப்பத்தின் பேரில் பாலியல் உறவுக்கு உட்படுத்தினாலும் அது பாலியல் வல்லுறவு என கருதப்படுவதே இதற்கு காரணம் எனவும் குறித்த புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த வருடம் (2016) இரண்டாயிரத்து முப்பத்தாறு முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 350 சம்பவங்கள் 16 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பாக அமைந்துள்ள அதே நேரம் 16 வயதுக்கும் குறைந்த ஆயிரத்து அறுனூற்று எண்பத்தாறு இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதில் ஆயிரத்து முன்னூற்று தொண்ணூற்று நான்கு (1394) சம்பவங்கள் குறித்த பதினாறு வயது கடக்காத பெண்களின் சுயவிருப்பத்தின் பேரில் இடம்பெற்றுள்ளன. இருனூற்று தொண்ணூற்றியிரண்டு சம்பவங்கள் அவர்களின் சம்மதமின்றி பலவந்தமாக நடைபெற்றுள்ளன. மேலும் பதினாறு வயதுக்கு மேற்பட்ட 642 பெண்கள் பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது 68 வீதமான பெண்கள் தமது விருப்பத்தின் பேரிலேயே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*