இலங்கையில் தாயை தேடிய பிரித்தானிய பெண்ணுக்கு கிடைத்த மகிழ்ச்சி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கையில் தனது தாயை தேடும் பிரித்தானிய யுவதியின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரித்தானியாவில் மிகவும் பிரபலமான ஷெரி எசேசன், தனது தாயை தேடி இலங்கை வந்துள்ளார்.

1991ஆம் ஆண்டு பிறந்த ஷெரி எசேசன் எனப்படும் குறித்த பெண்ணின் தாய் என நம்பப்படும் பெண் ஒருவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய கம்பஹா மாவட்டத்தின் ஆடை தொழிற்சாலை ஒன்றில் சேவை செய்யும் பெண் ஒருவர் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

பிரித்தானிய பெண்ணின் சிறு வயது புகைப்படத்திலுள்ள அவரது தாயாருக்கும் இந்த பெண்ணுக்கு இடையில் பொதுவாக ஒத்து போகும் விடயங்கள் பல உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் ஷெரி எசேசன் இரட்டை பிள்ளைகளில் ஒருவரும் எனவும் தெரியவந்துள்ளது.

அவரது மற்றைய சகோதரி தற்போது திருமணம் செய்துள்ளதாகவும், ஷெரி தொடர்பில் அவரது சகோதரிக்கும் ஒன்றும் தெரியாதெனவும் நேற்று சந்தித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இவர் தான் தாய் என்பதை உறுதி செய்வதற்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*