உலக மாற்றத்திற்கு அனைவரும் கட்டுப்பட்டே வாழவேண்டும்: சந்தியாகு

பிறப்பு : - இறப்பு :

நாம் வாழும் இந்த உலகில் மாற்றமொன்றே நிலையானது அந்த மாற்றத்திற்கு நாங்கள் அனைவரும் கட்டுப்பட்டே வாழவேண்டும் என்பதுதான் நியதி என கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தெரிவித்தார்.

மேற்படி கல்லூரியில் இருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”எமது பாடசாலையில் இருந்து திடீரென 14 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்லும் நிகழ்வானது எங்கள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சயான ஒரு சம்பவமாகும்.

யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இவ்வாறு பெருந்தொகையான ஆசிரியர்கள் எமது கல்லூரியை விட்டுச் செல்கின்றமை எமக்கு மாத்திரமல்ல இந்த பாடசாலைச் சமூகம், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியானதொன்றாகும்.

திடீரென இவ்வாறான மாற்றம் நடைபெற்றமையினால் பல பாடசாலைகள் நிருவாக ரீதியாக, ஆட்டம் காண ஆரம்பித்திருக்கின்றன.இங்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவிருக்கும் ஆசிரியர்கள் மிகவும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களாக என்னுடன் செயற்பட்டார்கள்.

தங்களை அர்ப்பணித்து தங்களது பாடசாலையை, எமது மாணவர்களை வழிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து உழைத்தவர்கள்” என பாடசாலையின் முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு மேலும் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit