காரைநகர் சிவன்கோயிலுக்கு அக்ரஹாரம் அமைக்க அடிக்கல் நாட்டிவைப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

2200553

ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படும் யாழ்.காரைநகர் சிவன்கோயிலின் அக்ரஹாரத்தை அமைப்பதற்கான அடிக்கல், இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டிவைக்கப்பட்டது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

மேற்படி சிவன்கோயிலின் மூன்று ஆஸ்தான குருக்கள் மற்றும் மூன்று வித்துவான்கள் உள்ளிட்ட ஆறு குடும்பத்தினருக்கு தலா ஒன்று தசம் எட்டு மில்லியன் ரூபாய் வீதம் இந்த வீடுகளை நிர்மாணிக்க மீள்குடியேற்ற அமைச்சு பதினொரு மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

அத்துடன் இவ்வீடுகளை யாழ். மாவட்ட இராணுவத்தினரைக் கொண்டு நிர்மாணிக்கவுள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit