முஸ்லிம்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை பெற்றுத்தருவோம்: சம்பந்தன்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

a22

முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணி மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நியாயமான தீர்வினைப் பெற்றுத் தர முயற்சித்து வருவதாக, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்றது. இச் சந்திப்பின்போதே சம்பந்தன் இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.

அத்தோடு, இரண்டு சமூகத்தவர்களும் பரஸ்பர புரிந்துணர்வுடன் தீர்வுகளைக் காண வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்து கொண்ட ஒப்பந்தத்தில், வடக்கு மாகாண மக்களின் மீள்குடியேற்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. அதனடிப்படையிலேயே இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit