டெஸ்ட் தொடரை வென்றது நியூஸிலாந்து

பிறப்பு : - இறப்பு :

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 193 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என தொடரை முழுமையாக வென்றது.

இரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 221 ரன்களும், இலங்கை 356 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 242 ரன்களும், வாட்லிங் 142 ரன்களும் விளாசினர்.

இதனால், நியூஸிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 524 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இலங்கைக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நியூஸிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இலங்கை அணி 196 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூஸிலாந்து தரப்பில் மார்க் கிரெய்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முடிவில் நியூஸிலாந்து அபார வெற்றி பெற்றது. ஏற்கெனவே முதல் டெஸ்டில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றிருந்ததால், தொடரை 2-0 என முழுமையாக வென்றது.

சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில் நியூஸிலாந்து தனி முத்திரை பதித்து வருகிறது.

2013 மார்ச் மாதத்துக்குப் பின், நியூஸிலாந்து இதுவரையிலும் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்திக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கடைசியாக ஆடிய பத்து டெஸ்ட் போட்டிகளில் ஏழு வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

“சமீபகாலமாக எங்கள் அணி அசாதாரணமான ஆட்டத்தை ஆடி வருகிறது.

இதன் மூலம் எங்களின் கடின உழைப்பு, நாட்டுக்காக வெற்றி பெற வேண்டும் என்ற வெறியை அறிந்து கொள்ளலாம்’ என்றார் நியூஸிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit