தீர்வுகள் கிடைக்காவிட்டால் போராட்ட வடிவங்கள் மாறும் : சிவமோகன் எச்சரிக்கை!

பிறப்பு : - இறப்பு :

gfhgfh

எமக்குரிய தீர்வுகள் உரிய முறையில் வழங்கப்படாது போனால் மீண்டும் நாம் தனியாக நின்று போராட்ட வடிவங்களை மாற்ற வேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, சிலாவத்தை இளம்பறவை விளையாட்டு கழகம் நேற்றையதினம் (திங்கட்கிழமை) நடத்திய மின்னொளியிலான உதைப்பந்தாட்ட போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“சிங்கள தேசம் எமது சமாதானக் கரங்களை எட்டி உதைக்குமேயானால் நிச்சயமாக மீண்டெழுந்து மீண்டும் நாம் தனியாக நிற்கவேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுவோம் என்பது நிதர்சனம். முள்ளிவாய்க்கால் பேரவலத்திலிருந்து நாம் மீண்டெழுவோமா? என்று நாமே சந்தேகப்பட்ட காலம் இருந்தது.

ஆனால் இன்றோ அதிலிருந்து சமாதானமான சூழலில் நாம் வாழ்வதற்காக அரசியல் யாப்பு மாற்றம் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதிலே எமக்குத் தேவையான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள், எமக்கான வடகிழக்கு இணைந்த எமது பூர்வீக பிரதேசம் இவை அனைத்தும் ஒன்றிணைத்து எமக்கு தீர்வாக கிடைக்குமா? இல்லையா? என்ற ஒரு இக்கட்டான நிலையில் இன்று நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

எந்தவொரு இனமும் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எதிர்த்து நிற்கும். எமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாது போனால் மீண்டும் நாம் வேறொரு சூழலிற்குள் தள்ளப்படுவோம்” என சிவமோகன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit