இலங்கை ஜனாதிபதியுடன்- மாகாண ஆளுநர்கள் சந்திப்பு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

asdxcx

மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்த மாகாணங்களின் ஆளுநர்களுக்கும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்த மாகாணங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் வகையிலேயே ஆளுநர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதியை இன்று சந்திப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அவற்றின் அதிகாரங்கள் மாகாண ஆளுநர்கள் மற்றும் அரச நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit