கருப்பையை காலால் எட்டி உதைத்து வெளியே வந்த குழந்தை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சீனாவில் குழந்தை ஒன்று தனது தாயின் கருப்பையை கால்களால் எட்டி உதைத்து வெளியே வந்துள்ளதால் அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 35 வாரத்தில் குழந்தை வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

Zhan என்ற பெண்மணி கர்ப்பமாக இருந்துள்ளார், 35 வாரங்களே ஆகியுள்ள நிலையில் இவருக்கு திடீரென பயங்கரமாக வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

சுமார் 5 மணிநேரமாக வயிற்று வலி தொடர்ந்து கொண்டே இருந்ததால் Peking University Shenzhen மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

Zhan – ஐ B-scan ultrasonography செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், குழந்தையின் கால்கள் பெண்ணின் கர்ப்பத்தில் இருந்து வெளியே வந்து, அவளுடைய அடிவயிற்றில் ஊடுருவியபடி இருந்தன.

குழந்தை தனது கால்களால் எட்டி உதைத்தால் அப்பெண்ணுக்கு கடந்த 5 மணிநேரமாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பட்டு செய்த மருத்துவர்கள் 10 நிமிடத்தில் பெண் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர், தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.

Zhan இதற்கு முன்னர் கருவுற்றபோது அவரது கருப்பையில் கட்டி இருந்து அகற்றப்பட்டது, தற்போது இரண்டாவது குழந்தையும் 35 வாரத்தில் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதால், இனி குழந்தை பெற்றுக்கொள்வதாக இருந்தால் 2 வருடத்திற்கு பின்னர் பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*