ஜெ.சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதியிடம் மீண்டும் குட்டு வாங்கிய பேராசிரியர் அன்பழகன்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வழக்கு விசாரணையில் அடிக்கடி குறுக்கீடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை நீதிபதி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பவானிசிங்கை மாற்ற வேண்டுமானால் கர்நாடக அரசிடம் முறையிடுங்கள் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் தொடங்கி இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு சார்பில் ஆஜராகும் சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கே.அன்பழகன் சார்பில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஜெயலலிதா ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவரது ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தபோது ஜாமீன் வழங்க அரசு சார்பில் ஆட்சேபனை இல்லை என்று அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கூறினார்.

மேலும் விசாரணை நீதிமன்றத்தில் இவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார். அரசு தரப்புக்கு வலுசேர்க்கும் வகையில் அவரது செயல்பாடுகள் இல்லை. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணையின்போதும் தொடர்ந்து அரசு சார்பில் அவர் ஆஜரானால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.

அதனால் அவரை நீக்கிவிட்டு இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜராக அனுபவம் வாய்ந்த மூத்த வக்கீல் ஒருவரை நியமிக்க வேண்டும்”என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று (புதன்கிழமை)இன்று விசாரணைக்கு வந்தது. அன்பழகன் தரப்பு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, இது தொடர்பான மனுவை நீதிமன்ற பதிவுத்துறையிடம் தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார்.

மேலும் தேவையில்லமால் வழக்கில் குறுக்கிடக் கூடாது எனவும், அவ்வாறு குறுக்கீடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கூடும் எனவும் நீதிபதி எச்சரித்தார். இந்த வழக்கில் தம்மையும் சேர்த்துக்கொள்ளக் கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவை சில தினங்களுக்கு முன்பு விசாரித்த நீதிபதி குமாரசாமி, நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit