வல்லப்பட்டைக் கடத்தல் முறியடிப்பு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஒரு தொகை வல்லப்பட்டையை கொண்டு செல்ல முற்பட்ட குவைத் நாட்டுப் பிரஜை கைது செய்யப்பட்டு, எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்தார்.

பாங்கொக் செல்வதற்காக இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.40 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 57 வயதுடைய குவைத் நாட்டு பிரஜையின் பயணப்பொதியைச் சுங்கப் பிரிவினர் சோதனை செய்தனர்.

இதன்போதே பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஒரு இலட்சத்து 54 ஆயிரம் ரூபா பெறுமதியான 4.5 கிலோ கிராம் எடை கொண்ட வல்லப்பட்டையைக் கைப்பற்றியிருந்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*