சுவிசில் காவல்துறையால் கொலையுண்டவரின் குடும்பத்திற்கு நேசக்கரம் நீட்டும் தர்சிகா

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

youtube-1

சுவிற்சர்லாந்தின் திச்சினோ மாநிலத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியான ஈழத் தமிழ் உறவு கரன் சுப்பிரமணியம் அவர்களின் துணைவியாருக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கவும், அவரது குடும்பத்தினரைச் சுவிஸ் நாட்டிற்கு வரவழைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சுவிஸ் நாட்டின் இளம் அரசியல்வாதியான திருமதி .தர்சிகா  கிருஸ்ணானந்தம்  வடிவேல் முன்வந்துள்ளார். சோசலிச ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் தூண் நகர சபை உறுப்பினரான அவர், மரணமடைந்த கரன் அவர்களின் பாரியாரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதோடு, அவர்கள் தொடர்பான விபரங்களைப் பெற்று சட்ட வல்லுநர்களிடம் வழங்கியும் உள்ளார்.

தொண்டு நிறுவனங்களின் உதவியோடு இப் பணியை முன்னெடுக்க விரும்பும் அவர், இப்பணியில் இணைந்து கொள்ள விரும்பும் நிறுவனங்களைத் தன்னோடு தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது பணிக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ள கதிரவன் குழுமம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோடு தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, தர்சிகா அவர்களின் முயற்சிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit