தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை:- ராஜித

பிறப்பு : - இறப்பு :

கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், யுத்தம் நிறைவு பெற்று 8 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்ட நிலையில் எத்தனை காலத்திற்கு தமிழ் அரசியல் கைதிகளை சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்திருக்க முடியும்.

கடந்த காலங்களில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மூலமாக எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை அதனால் வழக்குகள் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுக்கவேண்டும் எனவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கு மக்களின் காணிகள் விடுவிப்பு குறித்து ஊடவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

தற்போது வரையிலும் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட வடக்கு மக்களின் காணிகளில் நூற்றுக்கு 62 சதவீனமானவை விடுவிக்கப்பட்டு விட்டன என ராஜித பதில் அளித்தார்.

தொடர்ந்து, எஞ்சியுள்ள காணிகளை விடுவிப்பதற்கு அல்லது மாற்றீடு காணிகளை வழங்குவதற்காக இராணுவத்தரப்புடன் ஆலோசனைகளை நடத்தி வருகின்றோம் கூடிய விரைவில் இதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்போம் எனவும் ராஜித தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit