உலக அழிவு ஆரம்பமாகின்றது! – பீதியை ஏற்படுத்தும் அமெரிக்க ஆய்வாளரின் தகவல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

020

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பூமிக்கிரகத்தின் அழிவு ஆரம்பமாகவுள்ளது என்ற பரபரப்பு தகவலை அமெரிக்க ஆய்வாளரான டேவ் மீடி என்பவர் வெளியிட்டுள்ளார்.

உலக நிகழ்வுகள் மற்றும் வானியல் மாற்றங்களை தொடர்ந்தும் அவதானித்ததன் பின்னரே இந்தத் தகவலை தான் வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி நீண்ட நாற்களுக்கு பின்னர் ஏற்பட்ட சூரியக் கிரகணமே உலக அழிவிற்கான அறிகுறி எனக் குறிப்பிட்டுள்ள டேவ், அதன் பின்னர் பூமியில் பல மாற்றங்கள் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை புயல் தாக்கிய சம்பவம், பல்வேறு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து உலகம் முழுதும் ஏற்பட்டமை, காலநிலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் போன்றவற்றினை அவர் இதற்கு உதாரணமாக முன்வைத்துள்ளார்.

கடுமையான நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி, புயல்களுக்கும் பூமி முகம்கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள டேவ், அணு ஆயுதங்கள் பாவனையினாலும் அடுத்த 7 ஆண்டுகளுக்குள் பூமி அழியும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிரூபு எனப்படும் மர்மக் கிரகம் தொடர்ந்து பூமியை அச்சுறுத்திக்கொண்டே வருகின்றது அந்தக் கிரகம் பூமியோடு மோதி பாரிய அழிவு ஏற்படும் எனவும், அதற்கான அறிகுறிகளே தற்போது தென்பட்டு வருவதாகவும் டேவ் மேலும் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit