13000 வருடங்களாக பூமியை வேவு பார்க்கும் வேற்றுக்கிரக விண்கலம் சிக்கியது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

13000 வருடங்களாக பிளாக் நைட் (black knight) எனப்படும் மர்ம விண்கலம் ஒன்று பூமியை சுற்றி வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதன் முதலாக 1954ஆம் ஆண்டு அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஆய்வாளர் பிளாக் நைட் குறித்த தகவல்களை வெளியிட்டு வைத்தார்.

அதன் பின்னர் பலதரப்பட்ட ஆய்வாளர்களும் அதன் மீது நம்பிக்கை கொள்ளாத நிலையிலும் குறித்த விண்கலம் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினர்.

அதன் பின்னர் 1960 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க கடற்படை ஒரு கருப்பு நிற விண்கலம் 104.5 நிமிட நேரம் தென்பட்டதாக தகவல்களை வெளியிட்டனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிளாக் நைட் எனப்படும் விண்கலமானது பூமிக்கு அதிகபட்சமாக 1728 கிலோமீற்றர்கள் தொலைவிலும், குறைவாக 216 கிலோமீற்றர்கள் தூரத்திலும் பூமியை சுற்றிவருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1930கள் தொடக்கமே விண்வெளியில் இருந்து பல்வேறுபட்ட சமிஞ்சைகள் பெறப்பட்டதாக பல விண்வெளி ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவை பிளாக் நைட் கலத்திலிருந்தே வருகின்றன என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

தொடர்ந்தும் பிளாக் நைட் விண்கலம் குறித்து சமிஞ்சைகளும் செய்திகளுமே வெளிவந்த நிலையில் 1957ஆம் ஆண்டு லுயிஸ் கோராலோஸ் எனப்படும் ஆய்வாளர், ஸ்சுப்புட்னிக் 2 எனப்படும் விண்கலம் முலமாக பிளாக் நைட் விண்கலத்தின் ஒளிப்படத்தினை எதேச்சையாக பதிவு செய்தார்.

அதுமட்டுமல்லாமல் பிளாக் நைட் விண்கலம் ரேடார் கருவிகளிலும் பலமுறை சிக்கியுள்ளது. அண்மையிலும் இந்த மர்ம விண்கலமானது மீண்டும் தென்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போதைய நிலையில், பிளாக் நைட் விண்கலத்தின் இருப்பு உண்மை என தகவல் வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் அது ஏன் பூமியை சுற்றி வருகின்றது? அதனை ஏவிவிட்டது யார்? என்ற பல கேள்விகளுக்கு விடைதேட முற்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் இந்த விண்கலமானது வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு பட்டதே என விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*