நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்கள்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

mass

பல வருடங்களுக்குப் பின் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்தை இன்று (சனிக்கிழமை) அமெரிக்க துணை அதிபர் மார்க் பென்ஸ் ஆரம்பித்துவைத்தார்.

நிலவுக்கு ரஷ்யா ஸ்புட்னிக் என்ற நாய் ஒன்றை அனுப்பி வெற்றிகரமாக திரும்பக் கொண்டு வந்தது. இதற்கு போட்டியாக அமெரிக்காவின் விண்வெளித் துறையான நாசா மனிதர்களை அனுப்பும் முயற்சியை கையில் எடுத்தது.

பெரும் முயற்சிகளுக்கும், பல தோல்விகளுக்கும் அடுத்து 1969 ஆம்ஆண்டு ஜூலை மாதம் 20 திகதி வெற்றிகரமாக மனிதர்களை அனுப்பி , அங்கு அமெரிக்க கொடியை நட்டது. உலக வரலாற்றில் இது இன்னமும் பெரிய மைல் கல்லாக உள்ளது. நீல் ஆம்ஸ்ட்ராங் பெயர் சரித்திரத்தில் இடம் பிடித்தது.

இதையடுத்து நிலவின் மீதான ஆசையை குறைத்துக் கொண்ட நாசா செவ்வாய் கிரகத்தின் மீது தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தது. இந்தியாவின் இஸ்ரோ தவிர மற்ற எந்த நாடுமே நிலவில் ஆராய்ச்சி செய்யாமல் அமைதி காத்து வந்தன. இந்த நிலையில் தற்போது அமெரிக்க மீண்டும் நிலவு ஆராய்ச்சியை கையில் எடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அமெரிக்க துணை அதிபர் மார்க் பென்ஸ் ” நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாம் கையில் எடுத்துள்ளோம். இந்த முறை வெறும் கொடியை மட்டும் நட்டு விட்டு வரும் பயணமாக இது இருக்காது. இனி நடக்கப் போகும் அனைத்து வானியல் ஆராய்ச்சிக்கும் இதுதான் தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது ” என்று கூறினார்.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டிருக்கும் நாசா , அதற்கு முன்னூட்டமாக இந்த நிலவுப் பயணத்தை திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்தவுடன் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் வேலை ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளது நாசா நிறுவனம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit