கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள தானியங்கி கமரா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கூகுள் நிறுவனம் தானாக புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்ட அதிநவீன புகைப்பட கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் கடந்த புதன்கிழமை பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்திருக்கிறது. கையடக்க தொலைபேசி (Pixel 2, Pixel 2 XL), மடிக்கணனிகள் (PixelBook), ஹெட்செட் (Pixel Buds), ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் (Google Home Mini, Google Home Max), தானியங்கி கமரா (Google Clips) என பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றில் கூகுள் க்ளிப்ஸ் என்ற தானியங்கி கமரா எந்த நபரின் தலையீடும் இல்லாமல் தானாகவே புகைப்படங்களை எடுக்கும். இதில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (Artificial Intelligence – AI) மூலம் மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்டவற்றின் முகங்களை அடையாளம் காண முடியும்.

இதனால், இந்த ஸ்மார்ட் கமரா தான் இருக்கும் இடத்திலேயே எந்த விதமான மனித தலையீடும் இல்லாமல் புகைப்படங்களை எடுக்கும்.

இந்த கமரா பொருத்தப்பட்ட அல்லது வைக்கப்பட்ட இடத்தில் இருந்து 130 டிகிரி கோணத்தில் உள்ள நபர்களையும் பிராணிகளையும் புகைப்படம் எடுப்பதுடன் அதனை அதிலேயே சேமிக்கவும் செய்யும்.

இதற்காக 8GB மெமரி இந்த கமராவில் இருக்கிறது. 12MP சென்சார் கொண்ட இதன் விலை 249 அமெரிக்க டாலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*