பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்கவில்லை குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்க்

பிறப்பு : - இறப்பு :

அண்மையில் பேட்மிடன் வீராங்கனை சாய்னா நேவால் தன் பெயரை பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்கவில்லை என அதிருப்தி வெளியிட்டுருந்தார்.

அதைத்தொடர்ந்து பத்ம பூஷன் விருதுக்கு தனது பெயரையும் பரிந்துரைக்கவில்லை என குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்க் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் விஜேந்தர் சிங். 2010-ல் பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு அவரை கவுரவித்தது. இந்நிலையில், ”பத்ம பூஷண் விருதுக்கு நான் தகுதியானவன். இந்திய குத்துச் சண்டை சங்கம் எனது பெயரை பரிந்துரைக்க வேண்டும்” என இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பிடம், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திடமும் விஜேந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit