சுனந்தா புஷ்கர் மரணம் கொலை எனக் காவல் துறையால் உறுதி செய்யப் பட்டது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முன்னால் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தற்கொலை அல்ல எனவும் இவர் கொலை செய்யப் பட்டுள்ளார் எனவும் பிரேத பரிசோதனை மூலம் உறுதியாகி உள்ளது என டில்லி காவல் துறை பிரதான அதிகாரி BS பஸ்ஸி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

மேலும் இது கொலை என்பது உறுதியாகியுள்ளதால் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவான 302 இன் கீழ் FIR வழக்குப் பதியப் பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப் படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஜனவரியில் டில்லியில் நட்சத்திர விடுதி அறையில் இறந்து காணப் பட்ட சுனந்தா புஷ்கர் அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகள் உண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றே இதுவரை கருதப் பட்டிருந்தது. மேலும் சசி தரூர் திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு வைத்திருந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் டுவிட்டரில் கிடைத்த ஆதாரம் மூலம் சர்ச்சை கிளப்பப் பட்டிருந்தது. இதேவேளை தனது மனைவி கொல்லப் பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்த சசிதரூர் இதனால் தான் மிக அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன் என ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தற்போது சுனந்தா புஷ்கரது உடலில் விஷம் கலக்கப் பட்டதால் அவர் இறந்துள்ளார் எனப் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதுடன் விஷம் அவருக்கு ஊசி மூலம் செலுத்தப் பட்டதா அல்லது உணவில் கலக்கப் பட்டதா என்பது போலிசாரால் விசாரிக்கப் பட்டு வருகின்றது. மேலும் பிரதி போலிஸ் கமிசனர் பிரேம் நாத் தலைமையில் விசேட குழு ஒன்று அமைக்கப் பட்டு சுனந்தாவின் கொலை விசாரணை மேற்கொள்ளப் படவுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*