காஷ்மீரில் எல்லையில் பதற்றம் காரணமாக இதுவரை 10 000 கிராமத்தவர்கள் தமது வீடுகளை நீங்கியுள்ளனர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திங்கள் இரவு முழுதும் காஷ்மீரின் கத்துவா மற்றும் சம்பா மாவட்டங்களில் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் மோர்ட்டர் ஷெல் வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களால் BSF எனப் படும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரது இலக்குகளைக் குறி வைத்துக் கடுமையாக போராட்டத்தைத் தொடுத்து வருகின்றனர்.

இதில் ஜவான் என அழைக்கப் படும் இந்திய இராணுவ வீரர் ஒருவர் கொல்லப் பட்டும் இன்னொரு பெண்மணி கடுமையாகக் காயம் அடைந்தும் உள்ளனர்.

கவடா இராணுவத் தளம் அருகே பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கொல்லப் பட்ட ஜவான் BSF இன் 9 ஆவது பட்டாலியனைச் சேர்ந்த டவின்டெர் குமார் என அடையாளப் படுத்தப் பட்டுள்ளார். காயம் அடைந்த பெண் சம்பாவைச் சேர்ந்த ஷிபோ தேவி எனவும் அடையாளப் படுத்தப் பட்டுள்ளார். இதனால் காஷ்மீரின் சம்பா மற்றும் கத்துவா பகுதிகளில் பதற்ற நிலை மேலும் அதிகரித்துள்ளது. மேலும் இப்பதற்ற சூழ்நிலையின் காரணமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரதேசங்களிலுள்ள எல்லைக் கிராமங்களில் இருந்து வெளியேறி வரும் கிராமத்தவர்கள் எண்ணிக்கை வியாழக்கிழமை 10 000 ஐ எட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இக்கிராமத்தவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் பாகிஸ்தான் போராளிகள் தாக்க்குதலை நடத்தி வருவதும் கூறப்படுகின்றது.

இதேவேளை ஜம்மு மற்றும் காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் ஷெல் வீச்சைத் தொடர்ந்து BSF இயக்குனர் ஜெனெரல் D K பதக் அங்கு விரைந்துள்ளார். மேலும் சர்வதேச எல்லைப் பகுதியில் அதிகரித்துள்ள மோர்ட்டார் ஷெல் வீச்சுத் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் பதக் விளக்கமளித்துள்ளார். கடந்த வாரம் மட்டும் எல்லையில் பாகிஸ்தான் ஷெல் வீச்சில் 4 பாதுகாப்புப் படையினரும் ஒரு பெண்ணும் கொல்லப் படுள்ளனர். பதிலுக்கு இந்தியத் தரப்பில் இருந்து மேற்கொள்ளப் பட்ட தாக்குதலில் 5 பாகிஸ்தானி ரேஞ்சர்களும் ஒரு பெண்ணும் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*