சென்னை விமான நிலையத்தில் திருட்டு விமானம் ஏற வந்த வாலிபர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 5 அடுக்கு பாதுகாப்பை மீறி, சுவர் ஏறி குதித்து நுழைந்த வாலிபரை சுற்றுவளைத்து அதிகாரிகள் பிடித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் விசாரணையில், ரயிலில் ஓசி பயணம் போன்று, விமானத்திலும் பணம் இல்லாமல் செல்வதற்காக திருட்டுதனமாக விமானத்தில் ஏறவந்ததாக கூறியுள்ளார். டெல்லி கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த ‘விமானம் கடத்தல்’ தொடர்பான மிரட்டல் காரணமாக கடந்த 4ம் தேதி மாலையில் இருந்து சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள 9வது நுழைவாயில் வழியாக ஒரு வாலிபர், சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தார். அந்த வழியாக விமானத்தில் உள்ள பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம். இதனால், அங்கு பாதுகாப்பு அதிகாரிகள், உள்ளே செல்லும் பொருட்களையும், நபர்களையும் தீவிரமாக சோதனை நடத்தி அனுமதிப்பார்கள்.

ஆனால், பாதுகாப்பு அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பையும் மீறி, அந்த வாலிபர் உள்ளே நுழைந்தார். அங்கு விமானங்கள் நிறுத்தும் இடத்தில் மறைந்து மறைந்து சென்று சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் நுழைய முயன்றார். இதை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள், கண்காணிப்பு கேமராவில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார். அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது, ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது (25) என தெரிந்தது.

மேலும் விசாரணையில், ‘நான் துபாய் செல்வதற்காக வந்தேன். என்னிடம் பணம் இல்லை. எனவே திருட்டு ரயில் ஏறி செல்வது போல், திருட்டு விமானத்தில் துபாய் செல்ல முடிவு செய்தேன். அதற்காக இந்த வழியாக வந்தேன்’ என்றார். ஆனால், அதிகாரிகளுக்கு சந்தேகம் தீராததால், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவரா, நடிக்கிறாரா, தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவரா, தங்கம் கடத்தும் கும்பலோடு தொடர்பு கொண்டவரா என விசாரித்தனர். மேலும் மத்திய மற்றும் மாநில உளவுப்பிரிவு, கியு பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் உள்பட பல பிரிவை சேர்ந்தவர்கள் அந்த வாலிபரிடம் விசாரித்தனர்.

பின்னர், நேற்று மதியம் விமான நிலைய போலீசாரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தனர். போலீசார், வாலிபரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, மனநிலை பாதித்து சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழ் இருந்ததை கைப்பற்றினர். அந்த சான்றிதழ், உண்மையானதா, போலீசாரிடம் சிக்கினால், மனநிலை பாதிக்கப்பட்டவர் என தப்பிக்க போலியாக தயார் செய்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சென்னை நகரில் பல்வேறு இடங்கள் இருந்தாலும், அங்கு செல்லாமல் சென்னை விமான நிலையத்தை தேடி கண்டுபிடித்து சுவர் ஏறி குதித்து உள்ளே செல்வது ஏன் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும்போது, 25 வயது வாலிபர், நேற்று துணிச்சலாக சுவர் ஏறி குதித்து, இச்சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

13 பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்:

சென்னை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்து, அதிகாரிகளிடம் சிக்குபவர்கள் அனைவரும், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என கூறி, விடுவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மட்டும் 13 பேர், சென்னை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்து, மனநிலை பாதிக்கப்பட்டவர் என விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*