அரசாங்கத்தின் அனுமதியின்றி ஐ.ஓ.சி.யின் விலையை அதிகரிக்க முடியாது: அர்ஜுன!

பிறப்பு : - இறப்பு :

அரசாங்கத்தின் அனுமதியின்றி ஐ.ஓ.சி. நிறுவனம் தனது பெற்றோலியப் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது என பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

லங்கா பெற்றோலின் விலை அதிகரிப்புக் குறித்து நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐ.ஒ.சி. நிறுவனத்துக்கு தனது பெற்றோலியப் பொருட்களுக்கான விலையை அதிகரிப்பதற்கு அதிகாரம் உண்டு. ஆனால், அரசாங்கமே அதற்கான அனுமதியினை வழங்கவேண்டும்.

ஐ.ஓ.சி. நிறுவனம் நாட்டிற்குள் அவர்களது எண்ணத்திற்கு விலைகளை மாற்றும் விதத்தில் செயற்பட இடமளிக்க முடியாது. விலை அதிகரிப்புக் குறித்த திட்டச் செயற்பாடு ஒன்றினை நடைமுறைக்குக் கொண்டுவரவுள்ளோம்” என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit