இவர்கள் விளையாடும்போது நெஹ்ரா மட்டும் ஏன் விளையாடக்கூடாது? சேவாக் கேள்வி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான சனத் ஜயசூரிய, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் 42 வயது வரை விளையாடும்போது நெஹ்ரா மட்டும் ஏன் விளையாடக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் விரேந்திர சேவாக் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடரில் ஆசிஷ் நெஹ்ரா சேர்த்துக்கொள்ளப்பட்டது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியில் ஏராளமான இளம் வீரர்கள் இருக்கையில், 38வயதான ஆசிஷ் நெஹ்ராவுக்கு வாய்ப்பு வழங்குவது ஏன் என பல முன்னாள் வீரர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதுகுறித்து சேவாக் கூறுகையில்,

“அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடருக்கான இந்திய அணியில் ஆசிஷ் நெஹ்ரா இடம்பிடித்திருப்பதால் நான் எந்தவித ஆச்சரியமும் அடையவில்லை. அவர் அணியில் இடம்பிடித்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மேலும் வருங்காலத்தில் அதிக போட்டிகளில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆசிஷ் நெஹ்ரா சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருக்கும்பொழுது, அவரது உடற்தகுதிக்குப்பின் ரகசியம் உள்ளது. அவர் சுமார் 8 மணி நேரம் உடற்பயிற்சி கூடத்தில் நேரத்தை செலவிடுகிறார். இன்றைக்கு அவர் ரி-ருவென்ரி அணியில் இடம்பிடித்திருக்கிறார் என்றால், யோ-யோ டெஸ்டில் தேர்ச்சியடைந்துள்ளார். யோ-யோ டெஸ்டில் 17 முதல் 18 புள்ளிகள் பெற்றுள்ளார். விராட் கோஹ்லியின் இலக்கை தொட்டுள்ளார். உலகக்கிண்ண தொடரில் விளையாட வயது ஒரு அளவு கோல் என்று நான் நினைக்கவில்லை. உடற்தகுதியாக இருந்து, விக்கெட்டுக்கள் கைப்பற்றி, குறைந்த அளவு ஓட்டங்கள் கொடுத்தால் அவரை ஏன் அணியில் சேர்க்கக்கூடாது” என கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*