தனிநாடு கோரிக்கையும் பார்சிலோனாவின் விலகல் முடிவும்.!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஸ்பெயினில், தனி நாடு கேட்டு பல ஆண்­டு­க­ளாக கட்­ட­லோ­னியா மாகாணம் போரா­டி­வந்­தது. சுதந்­திர நாடாகச் செயற்­ப­டு­வது குறித்து கட்­ட­லோ­னியா மாகா­ணத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது.

கட்­ட­லோ­னியா தனி நாடாகச் செயற்­பட மக்கள் அமோக ஆத­ரவு அளித்­தனர். கட்­ட­லோ­னியா பிரிந்­து­செல்லும் பட்­சத்தில், பார்­சி­லோனா கால்­பந்து அணிக்கு ஸ்பானிஷ் லீக் தொடரில் விளை­யாட அனு­மதி கிடை­யாது என்று ஏற்க­னவே அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஸ்பானிஷ் லீக்கில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற பார்­சி­லோனா- – லோஸ் பால்மஸ் அணிகள் மோதிய ஆட்­டத்தைக் காண ரசி­கர்கள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. வெற்று மைதா­னத்தில் போட்டி நடத்­தப்­பட்­டது.

இந்­நி­லையில் , கட்­ட­லோ­னியா சுதந்­திர நாடாக மாறும்­பட்­சத்தில், பார்­சி­லோனா அணி ஸ்பானிஷ் லீக்கில் தொடர்ந்து ஆடாது என்று கழகத் தலைவர் ஜோசப் மரியா போர்ட்­டமு அறி­வித்­துள்ளார்.

கட்­ட­லோ­னியா மாகா­ணத்தில் பார்­சி­லோனா, எஸ்­பான்யல், ஜிரானா ஆகிய அணிகள் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றன. இந்த அணிகள், தங்கள் விருப்­பம்­போல அருகில் உள்ள நாடு­களில் விளை­யாட வாய்ப்­புள்­ளது.

பிரான்ஸின் லீக்–-1 , இத்­தாலி ’சீரிஸ்- ஏ’, இங்­கி­லாந்து பிரீ­மியர் லீக் ஆகிய தொடர்­களில் பார்­சி­லோனா அணி பங்­கேற்க வாய்ப்­புள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

இதற்கு, பிரீ­மியர் லீக்கில் வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்வான்ஸீ அணி பங்­கேற்­று­வ­ரு­வதை உதா­ர­ண­மாகச் சொல்­லலாம்.

பார்­சி­லோனா இல்­லாத ஸ்பானிஷ் லீக்கை நினைத்­துப்­பார்க்க முடி­யாது. கழகக் கால்­பந்தின் உச்­ச­க்கட்ட மோத­லாகக் கரு­தப்­படும் ரியல்­மாட்ரிட் –- பார்­சி­லோனா அணிகள் மோதும் ‘எல்க்­ளா­சிகோ’ மோதல் இனி நடை­பெ­றாது.

சம்­பியன்ஸ் லீக் தொடரில் மட்­டுமே பார்­சி­லோனா- –ரியல்­மாட்ரிட் அணிகள் சந்­தித்­துக்­கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

ஒருவேளை பார்சிலோனா இந்தத் தொடரிலிருந்து வெளியேறும் பட்சத்தில், ஸ்பானிஷ் லீக் தொடர் தன் மவுசை இழக்கும் நிலை ஏற்­ப­டலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*