இப்படி தொடர்ந்து தோற்றும்..இந்தியாவிடம் அடக்கி வாசிக்கும் அவுஸ்திரேலியா: என்ன காரணம்?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

007

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலியா அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.

இத்தொடரில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் வழக்கமான தங்கள் பாணியில் ஆக்ரோசமாக விளையாடவில்லை.

ஒரு போட்டியில் தோல்வி அடைந்துவிட்டாலே, ஆக்ரோசப்படும் வீரர்கள் இத்தொடரின் 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்தும் வீரர்கள் ஆக்ரோசத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், அவுஸ்திரேலியா அணியில் முன்பு இருந்த முக்கியமான வீரர்கள் சிலர் இப்போது இல்லை. அதோடு அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் நடக்க உள்ளது.

இதனால் இந்திய வீரர்களிடம் முறைத்துக் கொள்ளாமல் உள்ளனர். இந்திய அணி விரர்களுடன் முறைத்துக்கொண்டால், ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் ஏதேனும் ஒரு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. அல்லது அவ்வளவாக அதிக விலை கொடுத்து வாங்குவது சிரமம் என பயந்து போய் உள்ளனர்.

இதனால் தான் அவர்கள் தங்கள் வழக்கமான பாணியான ஆக்ரோச விளையாட்டை வெளிப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit