பாகுபலி படம் பார்த்து கொண்டே அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்: ஆச்சரிய நிகழ்வு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாகுபலி திரைப்படம் பார்த்து கொண்டே பெண் ஒருவர் மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் குண்டூரை சேர்ந்தவர் வினயா குமாரி (43), சமீபத்தில் இவருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையில் மூளையில் ஒரு கட்டி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 21ஆம் திகதி குண்டூரில் உள்ள மருத்துவமனையில் வினயா குமாரிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிக்கலான இந்த அறுவை சிகிச்சையின் போது நோயாளி விழித்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

இதனால், அறுவை சிகிச்சையின் போது வினயா பார்க்கும் வகையில் லேப்டாப்பில் பாகுபலி படம் போட்டுக் காட்டப்பட்டது.

அவரும் படம் பார்த்துக் கொண்டு இருக்க மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்தனர்.

சிகிச்சைக்கு பின்னர் வினயா கூறுகையில், ஒன்றரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதால் முழுப்படத்தையும் பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார்.

இந்த அறுவை சிகிச்சைக்கு ‘பாகுபலி பிரைன் சர்ஜரி’ என்று மருத்துவர்கள் பெயர் வைத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*