திரிணாமுல் காங். எம்.பி.யை தாக்கிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்தவனை புரட்டி எடுத்த மக்கள் !!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் சண்டிப்பூர் நகரில் திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் எம்.பி.யும், முதல்–மந்திரி மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி பேசினார்.

அப்போது திடீர் என்று மேடையில் ஏறிய ஒருவன் எம்.பி.யை நோக்கி வேகமாக சென்று அவரை கன்னத்தில் அறைந்தான் உடனே அவனை மேடையில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்களும் அடித்து உதைத்தனர். போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. என்றாலும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே எம்.பி.யை தாக்கிய வாலிபர் பெயர் டெபாசிஷ் ஆச்சார்யா என்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்தவன் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த 2–ந்தேதி பா.ஜனதாவின் மாணவர் அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்.

அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்.பி. தாக்கப்பட்டதற்கு முதல்–மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே எம்.பி.யை தாக்கிய அபிஷேக்குடன் மேலும் 2 பேர் வந்து இருப்பதாக தெரியவந்தது. அவர்கள் தான் அபிஷேக்கை தூண்டி விட்டதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் புகார் கூறினர். அதன் பேரில் கூட்டத்தில் அபிஷேக்குடன் வந்து இருந்த 2 பேரை போலீசார் பிடித்து சென்று விசாரித்து வருகிறார்கள். நாட்டின் இது போன்ற சம்பவங்கள் நடக்க மத்திய அரசின் மிதமான போக்கே காரணம் இது போன்ற பாசிச சிந்தனை உள்ள கயவர்களை இறும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் .

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*