அரசியலில் ஜெயிப்பதற்கு என்ன தேவை? – ரஜினியின் பேச்சால் பரபரப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

12

ன்னிறைவான அரசியலுக்கு பணமும் புகழும் மாத்திரம் போதாதென, இந்திய திரை நட்சத்திரம் சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அதற்கு மிகவும் சிறப்பான ஒரு விடயம் அவசியம் என்றும், அது என்னவென்று மக்களுக்கே தெரியுமென்றும் ரஜினிகாந்த் மேலும் தெரிவித்தார்.

சென்னை அடையாறில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும், அரசியலில் வெற்றி பெரும் ரகசியத்தைக் கேட்டால் தன்னோடு வருமாறு நடிகர் கமல்ஹாசன் அழைப்பதாக ரஜினிகாந்த் மேடையில் கூறியமை, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, சிவாஜி எனும் மகானின் சிலையை திறந்துவைக்கும் பாக்கியத்தை பெற்றதால் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிஷ்டசாலி என மீண்டும் நிரூபணமாகியுள்ளதென்றும் ரஜினிகாந்த் இதன்போது குறிப்பிட்டார்.

தமிழக அரசியலில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு, நீண்ட காலமாகவே வலுப்பெற்று வருகின்றது. இந்நிலையில், இன்றைய நிகழ்வில் இவர்கள் இருவரும் ஒரே மேடையில் சங்கமித்திருந்தனர்.

அண்மைய காலமாக தமிழக அரசியலில் கமல்ஹாசன் அடிக்கடி பேசப்படுவதோடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களையும் சந்தித்திருந்தார். அத்தோடு, கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சியொன்றையும் ஆரம்பிப்பாரென பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit