மஹிந்தவிற்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களுக்கு சுதந்திரக் கட்சியில் வேட்பு மனு கிடையாது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாக செயற்படும் உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வேட்பு மனு வழங்கப்படாது என கட்சி அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் இதனை ஞாயிறு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களின் போது, மஹிந்தவிற்கு ஆதரவாக செயற்படும் மாகாண சபை உறுப்பினர்கள் எவருக்கும் சுதந்திரக் கட்சியில் போட்டியிட வேட்பு மனு வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏற்றுக்கொள்ளாமை, சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்தமை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து செயற்படுதல்,

மாகாண சபைகளை கவிழ்க்க சூழ்ச்சி செய்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*