தமிழ் மக்களுக்கு எதிரான அரசை நிராகரிக்கும் விஜய் சேதுபதி!

பிறப்பு : - இறப்பு :

மத்திய அரசு தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த சூழலில் தனக்கு எந்த ஒரு தேசிய விருது கொடுத்தாலும் தான் அதைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு இது குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நீட் தேர்வு கொடுமை, நவோதயா பாடசாலை மூலம் ஹிந்தித் திணிப்பு என தமிழருக்கு விரோதமான சூழலில், மத்திய அரசு செயற்பட்டு வருகின்றது.

இப்படியான ஒரு சூழ்நிலையில், நீட் தேர்வுக்கு ஒரு உயிரையே பறிகொடுத்திருக்கிறோம். இந்த சூழலில் எனக்கு தேசிய விருது அறிவித்தால் அதைப் பெற்றுக் கொள்ள மாட்டேன். விருதுகளை விட எம் தமிழ் மக்களின் உணர்வுதான் முக்கியம்,” என குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit