பிரபுதேவாவுடன் சேர்ந்தாலே வெற்றி தான்: லட்சுமி மேனனின் பரபரப்பு கருத்து

பிறப்பு : - இறப்பு :

பிரபுதேவாவிற்கு ஜோடியாக ‘யங் மங் சங்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள லட்சுமி மேனன், முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்து விடுவேன் என தெரிவித்துள்ளார்.

லட்சுமி மேனன் தமிழில் ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ‘கும்கி’, ‘குட்டிப்புலி’, ‘பாண்டிய நாடு’ எனத் தொடர்ச்சியாக பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துவந்தார்.

இந்த நிலையில், ‘மிருதன்’, ‘றெக்க’ திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறாததால் லட்சுமி மேனன் ஒதுக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, தற்போது பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்து ‘யங் மங் சங்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இது குறித்து கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தான் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை நிராகரித்து வந்ததாகவும் தனது விருப்பத்திற்கு ஏற்ற மாதுரி கதைகள் அமையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தான் ஏனைய முன்னணி நடிகைகளுடன் போட்டி போட்டு வந்ததாகவும் மீண்டும் அந்த போட்டி தொடரும் எனவும் லட்சுமி மேனன் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit