அப்போது துணிவாக பேசாத ரஜினியும், கமலும் இப்போது ஏன் பேசுகின்றீர்கள்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்திலும் ஊழல் காணப்பட்டது. ஆனால் அப்போது ரஜனியும், கமலும் ஏன் குரல் கொடுக்கவில்லை என தே.மு. தி. க. கட்சியின் தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றிக்கு நேர்காணல் ஒன்றினை வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து பார்க்கட்டும் அரசியல் தொடர்பில் அவர்களுக்கு நான் எந்த கருத்தினையும் கூறமாட்டேன் எனத் தெரிவித்த விஜயகாந்த், எத்தனை தோல்விகள் வந்தாலும் நான் மீண்டும் வருவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இப்போது துணிந்து கருத்து கூறும் ரஜினியும், கமலும் அப்போது வாய் திறக்கவில்லை. ஆனால் நான் அப்படியல்ல அப்போதும் ஊழலை எதிர்த்து வந்தேன், கருணாநிதியையும் கூட எதிர்த்து வந்தேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் தூய்மையான கையினை உடையவன் என்ற காரணத்தினாலேயே மக்கள் என்னை தெரிவு செய்தனர் எனக் குறிப்பிட்ட விஜயகாந்த், 2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலை நாம் சந்தித்து அதில் வெற்றி பெறவும் தயாராக உள்ளோம் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*