மிகவும் அபாயகரமான அன்ரோயிட் அப்பிளிக்கேஷன்கள் பற்றி தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சம காலத்தில் காணப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகளுள் அதிக வரவேற்பு காணப்படுவது அன்ரோயிட் கைப்பேசிகளுக்குத்தான்.

இவற்றிற்கான அப்பிளிக்கேஷன்கள் அதிகளவில் இலவசமாகக் கிடைக்கின்றமையும், இலகுவாகக் கையாளக்கூடியதாக இருக்கின்றமையும் இதற்கு காரணங்களாகும்.

எனினும் இலவசம் என்று எண்ணி மொபைல் சாதனங்களில் நிறுவிக்கொள்ளும் சில அப்பிளிக்கேஷன்களால் ஆபத்துக்களே அதிகம் ஏற்படுகின்றன.

இவ்வாறான அப்பிளிக்கேஷன்கள் தனிப்பட்ட நபர்களின் விபரங்களை தமது சேர்வர்களில் சேமித்தல், WiFi கடவுச்சொற்கள், IME இலக்கம், ஏனைய கணக்குகள் என்பன தொடர்பான தகவல்களையும் திருடிக்கொள்கின்றன.

இவற்றிற்கும் மேலாக வேறு சில அப்பிளிக்கேஷன்கள் மொபைல் சாதனங்களின் செயற்பாட்டினை ஸ்தம்பிதம் அடையச் செய்கின்றன.

தவிர ஒருவரது செயற்பாட்டினை இரகசியமாக கண்காணிக்கக்கூடிய வகையிலும் சில அப்பிளிக்கேஷன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நம்பிக்கை வாய்ந்த அப்பிளிக்கேஷன்கள் தவிர்ந்த ஏனைய அப்பிளிக்கேஷன்களை மொபைல் சாதனங்களில் நிறுவிக்கொள்ளுதல் சாலச் சிறந்ததாகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*