அவுஸ்திரேலியாவுக்கு கொடுத்த அடி தான் தென் ஆப்பிரிக்காவுக்கும்: விராட் கோஹ்லி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

r1

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஒருநாள் தொடரின் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இருப்பினும் வெளிநாட்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து வரும் அவுஸ்திரேலியா அடுத்த போட்டியையும் வெற்றி பெறவே முயற்சிக்கும்.

இந்நிலையில் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி, அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி எப்படி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியதோ, அதே போன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவோம்.

சொந்த மண்ணில் பெரும் வெற்றியை போன்றே அந்நிய மண்ணிலும் எங்களது வெற்றி தொடரும் என கூறியுள்ளார்.

இந்திய அணி வரும் டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 பயிற்சி ஆட்டம், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit