“இயக்குனர் இமயம்” பாரதிராஜாவால் கிளிநொச்சி மாணவர்களிற்கு சான்றிதள்கள் வழங்கி வைப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தென்னிந்திய திரைப்பட இயக்குனர் “இயக்குனர் இமயம்” பாரதிராஜாவால் கிளிநொச்சி மாணவர்களிற்கு சான்றிதள்கள் வழங்கி வைப்பு
எஸ்.என்.நிபோஜன்

கணணி கற்கைநெறி பூர்த்தி செய்த மாணவர்களிற்கு சான்றிதள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. லண்டன் கற்பக விநாயகர் ஆலய அறக்கட்டளையின்நிதி அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இலவச கணணி கற்கைநெறி இடம்பெற்றறு வந்தது, குறித்த கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களிற்கு சான்றிதள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 2மணியளவில் வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா தலைமையில் இடம்பெற்றது. விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை அடுத்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. குறித்த நிகழ்வில் தென்னிந்திய திலைப்பட இயக்குன் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், பா உ சேனாதிராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.

மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதை தொடர்ந்து பயிற்சியை முடித்த 130 மாணவர்களிற்கு சான்றிதள்கள் இயக்குனர் இமயத்தால் வழங்கி வைக்கப்பட்டது, இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது இயக்குனர் இமயம், மற்றும் பா உ சேனாதிராஜா ஆகியோர் உரையாற்றியிருந்தமை குறிப்பிட தக்கதாகும்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*