விராத் கோலியை உற்சாகப்படுத்தும் மிட்செல் ஜான்சன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

விராத் கோலியின் தலைமைத்துவத்தின் கீழ் ஆக்ரோஷமான இந்திய அணியை எதிர்கொள்ள நேரிடலாம் என ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஜோன்சன் கூறியுள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென தோனி தனது முடிவை அறிவித்தார். இதையடுத்து நான்காவது டெஸ்ட் போட்டிக்கு விராத் கோலியே கேப்டனாக செயற்படும் நிலை தோன்றியது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் விராத் கோலி கேப்டனாக செயற்பட்ட போதும், தற்காலிக கேப்டனாக செயற்பட்டதால், அவருக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டே இருந்தது. ஆனால் நான்காவது போட்டியிலிருந்து இந்தியாவின் நிரந்தர டெஸ்ட் கேப்டனாக விராத் கோலி மாற்றம் பெற்றுள்ளதால், முழுவதுமாக தனது சுதந்திரமான முடிவுகளின் கீழ் அணியை வழிப்படுத்த அவரால் முடியும்.

“இந்நிலையில் விராத் கோலியின் தலைமையிலான இந்திய அணியிடம் புதியதொரு ஆக்ரோஷத்தைக் காணலாம். தோனியின் வழிநடத்தலிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். எதிர்த்து யார் விளையாடினாலும், ஆக்ரோஷமாக எதிர்கொள்ளும் பழக்கமுடையவர் கோலி. இதுவரை இந்திய அணி அவ்வளவு ஆக்ரோஷமாக விளையாடி பார்த்ததில்லை. கோலியிடம் எப்போதும் அக்னி போல் ஒரு கொதிப்பு இருக்கும். அவர் எப்போதும் அப்படித்தான் விளையாட விரும்புவார்” என மிட்செல் ஜோன்சன் புகழாரம் சூடியுள்ளார்.

இது உண்மையில் கோலியை பாராட்டும் உக்தியா, அல்லது மேலும் சூடேற்றும் உக்தியா என்பது நாளை தொடங்கவுள்ள போட்டியில் தெரியவரும். எப்படி இருந்தாலும், நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விராத் கோலியே மாஸ்டர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். அவர் மொத்தம் 499 ஓட்டங்களை எடுத்துள்ளார். சராசரி 83.13 ஆக உள்ளது. நான்காவது போட்டியில் இந்தியா சார்பில், சுரேஷ் ரைனா, அக்‌ஷர் படேல் ஆகியோர் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*