காஜலுக்கு பதிலாக `மாரி-2′ படத்தில் தனுஷ் ஜோடியாகும் நடிகை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் `மாரி-2′ படத்தில் தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வாலுக்கு பதிலாக ஒப்பந்தமாகும் நாயகி யார் என்று அறிவிக்கப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `மாரி’ படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது.

பாலாஜி மோகன் இயக்கவிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயனாக நடிக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் `மாரி-2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், `மாரி-2′ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இயக்குநர் பாலாஜி மோகன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

`மாரி’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து மார்க்கெட்டை தக்க வைத்துள்ளதால் அவருக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாரி-2 படத்தில் புதிய நாயகியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாயகி யார் என்பதை அறிய மாலை 6 மணி வரை காத்திருக்கத் தான் வேண்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*