3ஜி கனெக்டிவிட்டி கொண்ட நோக்கியா 3310 அறிமுகம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3310 3ஜி கனெக்டிவிட்டி கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3ஜி வசதி கொண்ட நோக்கியா 3310 விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

3ஜி கனெக்டிவிட்டி கொண்ட நோக்கியா 3310 அறிமுகம்
புதுடெல்லி:

எச்எம்டி குளோபல் நிறுவனம் 3ஜி வசதி கொண்ட நோக்கியா 3310 மொபைல் போனினை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக ஆஸ்திரேலிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 3ஜி நோக்கியா 3310 அதன்பின் மற்ற சந்தைகளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

நோக்கியா 3310 3ஜி பதிப்பு ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16-ம் தேதி விற்பனைக்கு வரும் என்றும் இதன்விலை AUD 89.95 அதாவது இந்திய மதிப்பில் ரூ.4,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் EUR69 அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,320 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதி்ய 3ஜி கனெக்டிவிட்டி ஆப்ஷன் மூலம் மொபைல் போனில் அதிவேக டேட்டா பயன்படுத்த முடியும். இத்துடன் ஐகான்களை மாற்றியைக்கும் வசதியும், கலர் தீம்களை தேர்வு செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய யூசர் இன்டர்ஃபேஸ் ரெட்ரோ என நோக்கியா விளம்பரம் செய்து வருகிறது.

நோக்கியா 3310 ஒருமாத ஸ்டான்ட்பை, வழக்கமான மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத் 2.1, நோக்கியாவின் பிரபல ஸ்நேக் கேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா 3310 3ஜி போனில் 2.4 இன்ச் QVGA 240×320 பிக்சல் டிஸ்ப்ளே, 64 எம்பி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

3ஜி நோக்கியா 3310 போனில் 1200 எம்ஏஎச் திறன் கொண்ட பேடட்டரியும், இரண்டு மைக்ரோ சிம் ஸ்லாட், ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நோக்கியாவின் பிரபல ‘ஸ்நேக்’ கேம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேம் முந்தைய பதிப்பை விட மேம்படுத்தப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*